தமிழ்நாடு

Jallikattu | Moorthy | "கிரிக்கெட் மைதானம் போல... ஜல்லிக்கட்டு.." - அமைச்சர் மூர்த்தி சொன்ன அப்டேட்

தந்தி டிவி

ஜல்லிக்கட்டு- எல்இடி திரையில் ஸ்கோர் போர்டில் விவரம் வெளியிடப்படும்

மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில், LED திரை மூலம் ஸ்கோர் போர்டில் சுற்று வாரியாக விவரங்கள் வெளியிடப்படும் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை மாவட்டத்தில் ஜனவரி 15 ஆம் தேதி அவனியாபுரத்திலும், 16 ஆம் தேதி பாலமேட்டிலும், 17 ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்த போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அரங்கில் ஆட்சியர் பிரவீன்குமார் மற்றும் அமைச்சர் மூர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

அதில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் சுற்றுகள் வாரியாக மாடுபிடி வீரர்களின் எண்ணிக்கை, களமிறங்கும் காளைகளின் எண்ணிக்கை ஆகியவற்றை எல்இடி திரைகளில் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் மூர்த்தி, இந்த ஆண்டு LED திரை மூலம் ஸ்கோர் போர்டில் சுற்றுவாரியாக விவரங்கள் வெளியிடப்படும் என்று உறுதி அளித்தார்.

Breaking | Tenkasi Crime | பஸ் ஸ்டாண்டில் கிடந்த உடல் | குற்றாலத்தில் கிடைத்த தலை

BREAKING || செம மாஸாக வெளியான `ஜனநாயகன்’ 2வது புரோமோ

"கூடவே கூடாது.." பார்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் பரபரப்பு உத்தரவு

🔴LIVE : Congress Protest | CJP | Rahul Gandhi | பிரதமர் இல்லம் முன் வெடித்த போராட்டம் - தள்ளுமுள்ளு

BREAKING || தமிழகம் முழுவதும் மெகா மோசடி - 120 தனியார் பள்ளிகள் கொடுத்த பகீர் புகார்