ஆரவாரமாக நடந்த மஞ்சம்பட்டி ஜல்லிக்கட்டு
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மஞ்சம்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த போட்டியில் 700 காளைகள் பங்கேற்றன. 400 மாடுபிடி வீரர்கள், இதில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் சிக்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டது.