தமிழ்நாடு

ஜாபர் சாதிக் வழக்கு.. ஸ்பெஷல் கோர்ட் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

போதை பொருள் கடத்தல் வழக்கில், ஜாஃபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரின் நீதிமன்ற காவலை, ஜூலை 26 வரை நீட்டித்து, டெல்லி போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு போதைப் பொருள் கடத்திய வழக்கில், சென்னையைச் சேர்ந்த முஜிபுர், முகேஷ் மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து சென்னையை சேர்ந்த ஜாபர் சாதிக் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளி சதானந்தம் உள்ளிட்டோரையும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் கடந்த மார்ச் 9இல் கைது செய்தனர். இந்நிலையில், ஜாஃபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரின் நீதிமன்ற காவலை ஜூலை 26 வரை நீட்டித்து, டெல்லி போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதை பொருள் தடுப்பு பிரிவினர் தாக்கல் செய்துள்ள ஐந்தாயிரம் பக்க குற்றப்பத்திரிக்கையை விசாரணைக்கு ஏற்பது தொடர்பாக அன்று முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்