தமிழ்நாடு

"ஜாக்டோ - ஜியோ" மீதான நடவடிக்கை விவகாரம் : வாபஸ் பெற தங்கம் தென்னரசு கோரிக்கை

அரசு ஊழியர் - ஆசிரியர் சங்கமான ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும் என்று சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார்.

தந்தி டிவி
அரசு ஊழியர் - ஆசிரியர் சங்கமான ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும் என்று சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார். பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த தங்கம் தென்னரசு, 277 பேர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும், சுமார் 5 ஆயிரம் பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். இதற்கு பதில் அளித்த மீன்வளம் மற்றும் நிர்வாக பணியாளர் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், மேற்கொண்டு பேரவையில் எதுவும் விவாதிக்க முடியாது என கூறி, பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்

TN Govt | Supreme Court | Sastra University | சாஸ்த்ரா விவகாரம் - TN அரசுக்கு SC முக்கிய உத்தரவு

BREAKING || ரூ.100 கோடி மோசடி வழக்கு - அன்பில் மகேஷ் உதவியாளரிடம் கிடுக்கிப்பிடி

Jail | Sim | DoT | "3 ஆண்டு சிறை.. ரூ.50 லட்சம் அபராதம்.." வெளியான கடும் வார்னிங்

CMVijay | ``புகார் அளிக்க இனி இந்த Whatsapp நம்பர் போதும்..'' தமிழக அரசு அதிரடி

Rain | வெளுக்கப்போகும் கனமழை.. எந்த மாவட்டங்கள்..? வானிலை மையம் அப்டேட்