பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களில் கருவூல பணியாளர்களும் அடக்கம். இதனால் சம்பளம் கணக்கிட்டு, வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வழக்கமாக 31 ந்தேதியே வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும் சம்பளப்பணம் இன்னும் வரவில்லை. அநேகமாக வரும் 4 ந்தேதிக்கு பிறகே சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். காவல்துறை அமைச்சகப் பணியாளர்களும் போராட்டத்தில் பங்கேற்றதால், போலீசாருக்கும் மாத சம்பளம் தள்ளிப்போயுள்ளது.