Namakkal Accident | ``4 பிள்ளைகளை பறிகொடுத்துட்டு நிக்குறேன்.. எதுக்கு உயிரோட இருக்கணும்’’ | மாணவியின் தந்தை கண்ணீர் பேட்டி
சாலை விபத்தில் 4 பேர் பலி - மாணவியின் தந்தை கண்ணீருடன் பேட்டி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் 4 மாணவிகள் உயிரிழந்த நிலையில், வாகனங்கள் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் செல்வதே இதுபோன்ற விபத்துகளுக்கு காரணம் என உயிரிழந்த மாணவியின் தந்தை கண்ணீர் மல்க தெரிவித்தார்.
4 மாணவிகள் உயிரிழந்தது குறித்து எலச்சிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், எலச்சிபாளையம் பகுதியில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதே விபத்துக்கு காரணம் என மாணவியின் தந்தை வேதனை தெரிவித்தார். மேலும், போதிய போக்குவரத்து வசதி இல்லாததால் இருசக்கர வாகனத்தில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
#namakkal #accident #students #thanthitv