தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர்கள் மே 3ஆம் தேதி வரை வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் தற்போது ஏற்படுள்ள சரிவை, பின்னர் மீட்டு எடுத்துவிட முடியும் என்றும் தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.