தமிழ்நாடு

சென்னை உட்பட 30 இடங்களில் திடீர் IT ரெய்டு

தந்தி டிவி

சென்னை உட்பட தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில், மருந்து ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் மற்றும் ஸ்டீல் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.சென்னை ​​​அண்ணாசாலை சயல் மேன்ஷன் வளாகத்தில் இயங்கி வரும் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவு அலுவலகத்தில், 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல், கவர்லால் அண்ட் கோ என்ற நிறுவனம் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது. வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெறுகிறது. எழும்பூர், செளகார்பேட்டை, மாதவரம், வேப்பேரி உள்ளிட்ட இடங்களிலும் இன்றுகாலை முதல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல்கள் தெரியவரும் என வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்