வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காந்திநகர் பகுதியில் உள்ள துரைமுருகன் வீட்டிற்கு, வருமானவரித் துறை துணை ஆணையர் விஜய் தீபன் தலைமையில் மூன்று அதிகாரிகள் நேற்றிரவு சென்றனர். இதனிடையே, அங்கு திரண்ட திமுகவினர், முறையான ஆவணங்கள் இன்றி சோதனை நடத்த வந்ததாக கூறி, வருமான வரித்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு துரைமுருகன் வீட்டிற்குள் சென்ற தேர்தல் பறக்கும் படை மற்றும் வருமான வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். விடிய, விடிய சோதனையின் முடிவில் சில ஆவணங்களை அவர்கள் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
இதனிடையே துரைமுருகன் மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பள்ளி, கல்லூரியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நீடித்து வருகிறது. ஆனால், வீட்டில் நடந்த சோதனை நிறைவடைந்து விட்டதாக, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.