தமிழ்நாடு

ஆசிரியர்களிடம் வரி பிடித்தம் செய்த விவகாரம்: "கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்" - அண்ணா பல்கலை.க்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த தொகைக்கான கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அண்ணா பல்கலை கழகத்திற்கு வருமானவரித்துறை, நோட்டீஸ் அனுப்பி உள்ளது

தந்தி டிவி

தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் இருந்து 10 சதவீதத்தை வரி என்ற பெயரில் அண்ணா பல்கலை கழகம் பிடித்தம் செய்துள்ளது. இந்த நிலையில் வருமானவரித்துறையில் இருந்து அண்ணா பல்கலை கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதில் ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த தொகையை அரசிடம் கட்டிவிட்டு அதற்கான படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும் இந்த பணிகளை 13 ஆம் தேதிக்குள் முடித்து அது தொடர்பான அறிக்கையை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்