``தமிழகத்தில் உக்கிரமா பரவுது.. எல்லாரும் மாஸ்க் போடுங்க’’ - அதிகாரப்பூர்வ அலர்ட் #tnvirus #tnviralfever #mask காய்ச்சல் பரவல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல் சென்னை மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், தமிழகத்தில் சுவாசத்தொற்று பரவல் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்றும், பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், இந்த ஆண்டு இதுவரை 15,933 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.