தமிழ்நாடு

59 ஆயிரம் உயிர்களை கொன்று குவித்து ரணவேட்டையாடிய இஸ்ரேல்

தந்தி டிவி

காசாவில் இஸ்ரேல் படைகளால் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 59 ஆயிரத்து 821ஆக அதிகரித்துள்ளது. மேலும் 1 லட்சத்து 44 ஆயிரத்து 851 பாலஸ்தீனியர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்... கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 88 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்... உணவு, மருந்து மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு காசாவில் தலைவிரித்தாடும் நிலையில் சர்வதேச அளவில் இஸ்ரேலுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன... இந்த சூழலில் மனிதாபிமான உதவிப் பொருட்களை கொண்டு செல்லும் லாரிகள் கெரெம் ஷாலோம் எல்லை வழியே காசாவுக்குள் நுழையத் துவங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு காசா பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் மனிதாபிமான உதவிகளை விமானம் மூலம் கீழே தூக்கிப் போடும் பணி துவங்கிய நிலையில், இந்த அணுகுமுறையை பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பின் தலைவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்