Kodaikanal | Mist | இது கொடைக்கானலா.. இல்ல படத்துல வர இந்திரலோகமா.. #kodaikanal #dindigul #mist #thanthitv கொடைக்கானலில் கடல் அலைபோல் தவழும் வெண்மேகங்கள் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், மலைத்தொடர்களில் கடல் அலைகளைப் போல வெண்மேகங்கள் தவழ்ந்து செல்கின்றன. நட்சத்திர ஏரி, கீழ்பூமி, ஜிம்கானா மைதானம், மூஞ்சிக்கல், உகார்த்தி நகர், நாயுடுபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக, காலை நேரங்களில் மலைத்தொடர்களைச் சூழ்ந்து வெண்மேகங்கள் மிதந்து செல்லும் காட்சிகள் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. குளிரிலிருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் ஸ்வெட்டர், ஜெர்கின் அணிந்து செல்கின்றனர். வெண்மேகங்கள் கடல் அலைபோல் நகரும் காட்சிகள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன.