தமிழ்நாடு

மாணவர்களுக்கு மறுக்கப்படும் வாக்குரிமை- "டிஜிட்டல் இந்தியாவில் மாற்று வழி திட்டம் இல்லையா?"

நவீன டிஜிட்டல் இந்தியாவில் வெளிமாநிலங்களை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் தங்களுடைய வாக்கு உரிமையை நிலை நாட்டுவதற்கு வாய்ப்பில்லாதது ஏன் என்ற கேள்வி மாணவர் சமூகத்தினரிடையே எழுந்திருக்கிறது.

தந்தி டிவி

100 சதவிதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்பதற்காக வாக்காளர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் தேர்தல் ஆணையம், மற்றொருபுறம் வெளிமாநிலங்களில் படிக்கும் கல்லூரி மாணவர்களை கருத்தில் கொள்ளவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஒவ்வொரு மாநில மாணவர்களும் வேறு மாநிலங்களுக்கு சென்று படிக்க கூடிய நிலை இன்று பெரும்பாலும் நிலவுகிறது. இந்த மாணவர்கள் தங்களது மாநிலங்களுக்குச் சென்று வாக்களிக்க முடியாத சூழல் உருவாகி இருக்கிறது. காரணம் என்னவென்றால், தமிழகத்தில் பொறியியல் கல்லூரி உட்பட பல உயர் கல்வி நிறுவனங்களில் தற்போது செமஸ்டர் தேர்வுகள் நடந்து வருகின்றன. இதனால் மாணவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்று வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

வாக்களிப்பதற்கு ஆர்வமாக உள்ள போதும், அதற்கான வாய்ப்புகள் இல்லாததை சென்னையில் படிக்கும் வெளிமாநில மாணவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். வாக்களிப்பது என்பது அனைவருக்கும் உள்ள அடிப்படை உரிமை நாம் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும் ஆனால் எங்களால் அந்த வாய்ப்பை பயன்படுத்த முடியவில்லை இதனால் நாங்கள் விரும்பிய தலைவரை எங்களால் தேர்தெடுக்க முடியாத நிலை ஏற்படும்.

வாக்களிப்பது நமது கடமை என்பது அனைவரும் அறிந்த ஒன்று சென்னையில் படித்து வருவதால் என்னால் வாக்களிக்க முடியவில்லை என்னதான் டிஜிட்டல் இந்தியாவாக இருந்தாலும் என்னால் இங்கிருந்து வாக்களிக்க முடியவில்லை.

டிஜிட்டல் இந்தியா என்று பரவலாக பேசக்கூடிய இந்த காலகட்டத்தில், மாணவர் சமுதாயத்தை கவனத்தில் கொள்ளாமல் இருப்பது மாணவர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், வரக்கூடிய காலங்களில் இந்த குறைகளை சரிசெய்து, வெளி மாநில மாணவர்களும் வாக்களிப்பதை, இந்திய தேர்தல் ஆணையமும், மத்திய, மாநில அரசுகளும் உறுதி செய்ய வேண்டும் என்பதே மாணவர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு