தமிழ்நாடு

Chennai | Metro | சாலைகளில் அந்தரத்தில் தொங்கும் இரும்புகள் - சென்னையில் திக்..திக்..

சாலைகளில் அந்தரத்தில் தொங்கும் இரும்புகள் - சென்னையில் திக்..திக்..

thanthitv

Chennai | Metro | சாலைகளில் அந்தரத்தில் தொங்கும் இரும்புகள் - சென்னையில் திக்..திக்..

#chennai #chennaimetro #madhavaram #cmrl #chennaimetro #thanthitv

மாதவரத்தில் மெட்ரோ பணி - அந்தரத்தில் தொங்கும் இரும்புகளால் அச்சம் சென்னை மாதவரம் ஆந்திரா பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சாலைகள் குறுகியதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகளவில் வாகனங்கள் செல்லும் நிலையில், மெட்ரோ பணிகள் நடைபெறும் இடங்களில் சில இணைப்பு இரும்புகள் பாதுகாப்பின்றி தொங்கிக் கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நெரிசலான சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சென்று வரும் நிலையில், இரும்புகள் எதிர்பாராத விதமாக கீழே விழுந்தால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே, ஆபத்தான நிலையில் தொங்கும் இரும்புகளை உடனடியாக அகற்றி, மெட்ரோ பணிகள் நடைபெறும் பகுதிகளில் உரிய தடுப்புகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recharge | மொபைல் ரீசார்ஜில் அதிரடி மாற்றம் - புது ரூல்ஸை இறக்கி ஹேப்பி நியூஸ் சொன்ன TRAI

EV Velu | DVAC| எ.வ.வேலு மற்றும் அவரின் மகன் மீது பாய்ந்தது FIR

veeramani | ஜெம் வீரமணி வழக்கு.. சமூக வலைதள பக்கங்களுக்கு சைபர் கிரைம் ‘வார்னிங்’

BREAKING || RTI சட்டத்தில் இருந்து விலக்கு அளித்த அரசாணை - எதிர்ப்பு எழுந்த நிலையில் ரத்து

BREAKING | உதயநிதியின் பிரசார பேச்சு.. "அவங்க வீட்டு பெண்களிடம் போட்டு காட்ட வேண்டும்"-அமைச்சர் CTR