தமிழ்நாடு

சதுரங்க வேட்டை பட பாணியில் கைவரிசை : இரிடியம் மோசடி கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது

இரிடியம் மோசடி கும்பலைச் சேர்ந்த 6 பேரை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவான முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.

தந்தி டிவி

கரூர் மாவட்டம், மண்மங்கலம் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் ரொக்கத்த்தை இரிடியம் மோசடி கும்பல் ஏமாற்றி வாங்கியுள்ளது. இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில், கரூர் காந்திகிராமம் பகுதியை சேர்ந்த தியாகராஜனை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில், இந்த கும்பலை சேர்ந்த 6 பேரை அந்தியூர் அருகே குருநாத ஸ்வாமி கோயில் வனப்பகுதியில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் ரொக்கம், பித்தளை குடம், மெட்டல் டிடெக்டர் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். முக்கிய குற்றவாளி தலைமறைவானதால் அவனை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சதுரங்க வேட்டை பட பாணியில் நடந்த இந்த மோசடி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்