தமிழ்நாடு

தமிழகத்தில் அட்டகாசம் செய்த ஈரானிய கொள்ளையர்கள் 4 பேர் கைது

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அட்டகாசம் செய்து வந்த ஈரானிய கொள்ளையர்கள் 4 பேரை சென்னை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

ஆந்திராவில் நகைக்கடையில் வேலை பார்த்து வந்த தினேஷ்குமார், கமலேஷ் ஆகியோர், தங்கம் வாங்குவதற்காக கடந்த 10ஆம் தேதி சென்னை வந்துள்ளனர். சென்னை சவுகார்பேட்டையில், ஒரு கோடியே 73 லட்சத்துக்கு, 4 கிலோ தங்கத்தை வாங்கி வந்துள்ளனர்.

அப்போது, டெல்லி போலீசார் எனக்கூறி 4 பேர் தினேஷை விசாரணை செய்து, தங்கத்தை சோதனையை செய்வது போல கொள்ளையடித்து சென்றுள்ளனர். உடனடியாக தினேஷ் அருகில் உள்ள யானைக்கவுனி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், கொள்ளையடித்தது, ஏற்கனவே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஈரானிய கொள்ளையர்கள் என தெரிய வந்தது.

இதையடுத்து, தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசாருக்கு, கொள்ளையர்கள் ரயில் மூலம் தப்பி செல்வது தெரிய வந்தது. உடனடியாக விமானம் மூலம் மத்திய பிரதேசம் விரைந்த சென்னை போலீசார், கொள்ளையர்கள், கந்துவா ரயில்வே நிலையத்தில் இறங்கு போதே கையும் களவுமாக பிடித்து, அவர்களை கைது செய்தனர். சுமார் ஒன்றரை கிலோ தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்