தமிழ்நாடு

ராணிப்பேட்டை: கொள்ளைபோன 30 கிலோ ஐம்பொன் கிருஷ்ணர் சிலை குறித்து விசாரணை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சலோக கிருஷ்ணர் சிலை திருடப்பட்டது, ஊர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

ஆற்காட்டை அடுத்த கானார் பஜனை வீதியில் பழமையான கிருஷ்ணர் கோயில் உள்ளது. கோயிலை இன்று காலை பூஜைக்காக திறக்கச் சென்றபோது, கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, உள்ளே இருந்த 84 ஆண்டுகள் பழமையான, 30 கிலோ எடையுள்ள கிருஷ்ணர் சிலை கொள்ளை போனது தெரியவந்தது. மூனேகால் அடி உயரமுள்ள ஐம்பொன் கிருஷ்ணர் சிலையின் மதிப்பு10 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. தகவலின் பேரில் வந்த வேலூர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.சுரேஷ், சம்பவ இடத்தை பார்வையிட்டார். மேலும் திருட்டு குறித்து வழக்கு பதிவு செய்து ஆற்காடு நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?