சிங்கப்பூரில் முதல் முதலாக நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற, சேலம் மாணவர்களுக்கு ஊர்மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சிங்கப்பூரில் முதல் முதலாக சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டி கடந்த ஒன்றாம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற 9 மாணவர்களில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் மற்றும் எஸ்வந்த் ஆகியோர் தங்கம் மற்றும் வெண்கலம் உள்பட 4 பதக்கங்களை வென்றனர். இதைத் தொடர்ந்து, சொந்த ஊர் திரும்பிய அவர்களுக்கு ஊர் பொதுமக்கள் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது.