தமிழ்நாடு

இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் : சுடுகாட்டில் குழந்தையை போட்டுச் சென்ற பெண்

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் இன்று அனுசரிக்கப்படு நிலையில், இன்று ஒரு பெண் குழந்தை சாலையோரம் வீசப்பட்டிருந்தது

தந்தி டிவி

சென்னை அடுத்துள்ள போரூர் காரம்பாக்கத்தில் உள்ள கால்வாய் ஓரம் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அங்கு ரோந்து பணியில் இருந்த வளசரவாக்கம் காவல் நிலையத்தைச் சேர்ந்த ரத்னகுமார் என்ற போலீஸ்காரர் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று புதரிலிருந்து குழந்தையை மீட்டார்.

பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் ஒரு லுங்கியில் சுற்றப்பட்டு அந்தப் புதரில் வீசப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து உடனடியாக அந்தப் குழந்தையை போரூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அந்த குழந்தையை ஒரு பெண் பையில் கொண்டு வந்து போடும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு