தமிழ்நாடு

இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் : அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக, இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் எந்த தகுதியின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது? என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தந்தி டிவி

* தொடக்கக்கல்வித் துறையின் இடைநிலை ஆசிரியர்களை, சமூக நலத்துறையின் கீழ் உள்ள அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் ஆசிரியர்களாக நியமிக்க இடைக்கால தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

* இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியன், இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்திற்கான தகுதிகள் என்ன? கடந்த 5 ஆண்டுகளாக எந்த தகுதியின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் நியமனம் நடைபெற்றது? எனவும் கேள்வி எழுப்பினார்.

* எத்தனை இடைநிலை ஆசிரியர்கள் இதுவரை நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து தமிழக அரசிடம் உரிய தகவல் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி