மத்திய அரசு அறிக்கையின் அடிப்படையில், மண்டல வாரியாக மாவட்டங்களை பட்டியலிட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளை படிப்படியாக அனுமதிப்பது தொடர்பாக ஆலோசை நடைபெறுகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள, நிதி செயலாளர் கிருஷ்ணன் தலைமையிலான 21 பேர் கொண்ட வல்லுனர் குழு, தனது இரண்டாம் கட்ட அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது.