தமிழ்நாடு

எந்தெந்த பகுதிகளில் தொழிற்சாலைகளை தொடக்கம்? - நிதித்துறை செயலாளர் தலைமையிலான குழு ஆய்வு

தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் தொழிற்சாலைகள் தொடங்குவது என்பது குறித்தான 2ஆம் கட்ட அறிக்கையை நிதிதுறை செயலாளர் கிருஷ்ணன் தலைமையிலான வல்லுநர் குழு, முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது.

தந்தி டிவி

மத்திய அரசு அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாகவும், 24 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாகவும், ஒரு மாவட்டம் பச்சை மண்டலமாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது.

* சென்னை, மதுரை, நாமக்கல், தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், ராணிபேட்டை, விருதுநகர், திருவாரூர், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன

* தேனி, தென்காசி, நாகை, திண்டுக்கல், விழுப்புரம், உள்ளிட்ட 24 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன

* இதையடுத்து மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளை படிப்படியாக அனுமதிப்பது மற்றும் நோய்த்தொற்று பரவாமல் இருக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நிதி செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் 21 பேர் கொண்ட வல்லுனர் குழு அமைக்கப்பட்டது.

* அந்த குழு ஏற்கனவே முதற்கட்ட அறிக்கையை சமர்ப்பித்த நிலையில் இன்று தனது இரண்டாம் கட்ட அறிக்கையை சமர்ப்பித்தது.

* அதன் படிப்படையில், தொற்று குறைவாக உள்ள பகுதிகளில் தொழிற்சாலைகள் இயங்க அனுமதிப்பது தொடர்பாகவும், தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனுமதிப்பது தொடர்பாகவும் முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி