தமிழ்நாடு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வீடு கட்டி கொடுத்த வெளிநாடு வாழ் இந்தியர்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் காமேஸ்வரம் கிராமத்தை சேர்ந்த எழிலரசி என்பவருக்கு, ரஷ்யாவில் வசித்துவரும் வெளிநாடு வாழ் இந்தியர் புதிதாக வீடு கட்டி கொடுத்துள்ளார்.

தந்தி டிவி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் காமேஸ்வரம் கிராமத்தை சேர்ந்த எழிலரசி என்பவருக்கு, ரஷ்யாவில் வசித்துவரும் வெளிநாடு வாழ் இந்தியர் புதிதாக வீடு கட்டி கொடுத்துள்ளார்.

கஜா புயல் தாக்குதலில் நாகை மாவட்டம் காமேஸ்வரம் கிராமத்தை சேர்ந்த எழிலரசி என்பவரது வீடு முற்றிலும் இடிந்து சேதமானது. இதனையடுத்து தென்னங்கீற்று முடைந்து குடும்பத்தை காப்பாற்றி வந்த எழிலரசி குடியிருக்க வீடு இல்லாமல் சிரமப்பட்டு வந்தார். இந்த நிலையில் காமேஸ்வரத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், எழிலரசிக்கு வீடு கட்டி தருவதாக உறுதி அளித்திருந்தார். அதன்படி ரஷ்யாவில் வசித்துவரும் தமிழகத்தை சேர்ந்த தனசேகரன் என்பவர் உதவியுடன் நாம் தமிழர் கட்சி சார்பில், 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய வீடு ஒன்று எழிலரசிக்கு கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்