தமிழ்நாடு

அகில இந்திய அளவில் நாய்கள் கண்காட்சி - பார்வையாளர்களை கவர்ந்த வெளிநாட்டு நாய்கள்

நாகர்கோவிலில் இந்திய அளவிலான நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்ட கெனல் கிளப் நடத்திய இந்த கண்காட்சியில் 38 வகையான 300க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்து கொண்டன.

தந்தி டிவி

நாகர்கோவிலில் இந்திய அளவிலான நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்ட கெனல் கிளப் நடத்திய இந்த கண்காட்சியில் 38 வகையான 300க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்து கொண்டன. ஜெர்மன் ஷெப்பர்டு, லேப்ரடார், போமெரியன், ராட்டவீலர் போன்ற வெளிநாட்டு நாய்களும், கோம்பை, சிப்பிப்பாரை, ராஜபாளையம், கன்னி போன்ற இந்திய வகை நாய்களும் பார்வையாளர்களை கவரும் விதமாக இருந்தன.

குற்ற சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டு பிடிக்க போலீசார் பயன்படுத்தும் நாய்களும் கண்காட்சிக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. கண்காட்சியில் பங்கேற்ற நாய்களுக்கு வேகமாக ஓடுதல், பந்தை கவ்வுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்