இந்திய கடலோர காவல்படை சார்பில் திருவொற்றியூர் அடுத்த திருச்சினாங்குப்பத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. கடலோர காவல்படை மருத்துவ குழு முகாமிற்கு வந்தவர்களின் உடலை பரிசோதனை செய்து உரிய ஆலோசனையும், மருந்தும் வழங்கினார்கள். சுமார் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள், இதன் மூலம் பயன்பெற்றனர்.