வங்கிகளில் மூன்றாம் நபர் பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தும் போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு உடனடியாக வங்கியை அணுகுமாறு இந்தியன் வங்கியின் பொதுமேலாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார். இந்தியன் வங்கியின் நிதிநிலையை அறிக்கையை வெளியிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், முத்ரா கடன் திட்டம் தமிழகத்தில் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்தார். மொபைல் வங்கி பரிவர்த்தனை 22 புள்ளி 7 சதவீதமாகவும் இணையதள பரிமாற்றங்கள் 11 புள்ளி 6 சதவீதமும் உயர்ந்துள்ளதாக நாகராஜன் கூறினார்.