தமிழ்நாடு

சுதந்திர தின விழா முதல் நாள் அணிவகுப்பு ஒத்திகை

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னையில், முதல் நாள் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது

தந்தி டிவி

72-வது சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடுமுழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சென்னை தலைமை செயலகத்தில் தேசியக் கொடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுகிறார்.இதற்கான முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடந்தது.

கமாண்டோ படை, குதிரைப்படை, பெண் காவலர்கள், தேசிய மாணவர் படை மற்றும் மாணவ - மாணவியர் பங்கேற்றனர். ஒத்திகை நிகழ்ச்சிக்காக, சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

விமானநிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை விமானநிலையத்திற்கு ஏழு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதிதிட்டம் தீட்டியிருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகளை வழியனுப்ப வருபவர்கள் விமானநிலையத்திற்குள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்