தமிழ்நாடு

நாமக்கல் : தனியார் பள்ளியில் 4வது நாளாக வருமான வரி சோதனை

நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தனியார் பள்ளியில் நான்கு நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்துள்ளது.

தந்தி டிவி
நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தனியார் பள்ளியில் நான்கு நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்துள்ளது. நீட் பயிற்சி வகுப்பிற்கு லட்சக்கணக்கில் பணம் பெறப்பட்டதாக வந்த புகாரை அடுத்து, இந்த சோதனை நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள இப்பள்ளியின் பயிற்சி வகுப்பு மையங்களிலும் சோதனை நடைபெற்றது. இதில் நாமக்கல் பள்ளியில் இருந்து கணக்கில் வராத 30 கோடி ரூபாயும், மற்ற பகுதிகளில் இருந்து 150 கோடி ரூபாயும், பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பல முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளி தாளாளரின் 4 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்