சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேலும் ஒரு வருவாய் ஆய்வாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அமைந்தகரையில் பணியாற்றும் பெண் வருவாய் ஆய்வாளர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவருக்கு கடந்த 4ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதே அமைந்தகரையில் உள்ள தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் ஆண் வருவாய் ஆய்வாளருக்கு இன்று கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர்.