தமிழ்நாடு

செம்மர கடத்தல் கும்பல் துரத்தியதால் சம்பவம் - கிணற்றில் விழுந்த விவசாயி பலி

செம்மர கடத்தல் கும்பல் துரத்தியதால் சம்பவம் - கிணற்றில் விழுந்த விவசாயி பலி

தந்தி டிவி

செம்மர கடத்தல் கும்பல் துரத்தியதால் சம்பவம் - கிணற்றில் விழுந்த விவசாயி பலி

சேலத்தில் செம்மர கடத்தல் கும்பல் துரத்திய போது கிணற்றில் விழுந்த விவசாயி பலியானார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் எருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. விவசாயியான இவருக்கு செம்மரக்கட்டை கடத்தும் கும்பலுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. செம்மரக்கட்டை கடத்தியதால் வந்த பணத்தை பங்கு போட்டுக் கொள்வதில் அதே கிராமத்தை சேர்ந்த சிலருடன் முன்விரோதமும் இருந்துள்ளது. இதனிடையே சேலம் அருகே உள்ள கருமந்துறைக்கு வந்திருந்த ராஜாவை அவரின் எதிர்தரப்பு கும்பல் காரில் கடத்திச் சென்றது. அப்போது தப்பிச் செல்ல முயன்ற அவரை அந்த கும்பல் விடாமல் துரத்திச் சென்றுள்ளனர். தப்பி ஓடிய ராஜா, அந்த பகுதியில் உள்ள கிணற்றில் விழுந்ததில் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் கடத்தல் கும்பலை சேர்ந்த சீனிவாசன், கணேசன், தர்மன், செல்வம் உள்ளிட்டோரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்