தஞ்சையில், ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் மகன் கண்முன்னே தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அருளானந்த நகரை சேர்ந்த கிருத்திகா தனது 4 வயது மகனை பள்ளியில் இருந்து ஆட்டோவில் அழைத்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பரிசுத்தம் நகர் அருகே ஆட்டோ கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த கிருத்திகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகன் லேசான காயமடைந்தார். தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, ஆட்டோ ஓட்டுநர் பார்த்திபனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.