தமிழ்நாடு

Dindigul | தனியார் மில் பஸ் மீது பயங்கர வேகத்தில் மோதிய லாரி - பதைபதைக்க வைக்கும் விபத்து..

Dindigul | தனியார் மில் பஸ் மீது பயங்கர வேகத்தில் மோதிய லாரி - பதைபதைக்க வைக்கும் விபத்து..

thanthitv

Dindigul | தனியார் மில் பஸ் மீது பயங்கர வேகத்தில் மோதிய லாரி - பதைபதைக்க வைக்கும் விபத்து.. திண்டுக்கல்லில் அதிர்ச்சி திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தனியார் மில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 8 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். வேடசந்தூர் அருகே உள்ள தனியார் நூற்பாலையில் நைட் ஷிப்ட் முடித்த தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு, வத்தலகுண்டு நோக்கி தனியார் மில் பேருந்து சென்று கொண்டிருந்தது. காக்காதோப்பூர் அருகே பேருந்து சாலையை கடக்க முயன்றபோது, லாரி ஒன்று பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 3 பெண்கள் உட்பட 8 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். லாரி ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்த‌தால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

CJP |Delhi | Supreme Court | மாணவர்கள் மீது தாக்குதல் - களமிறங்கும் டீம்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி

Minister Vignesh | "இந்த மிரட்டுறதுலாம் இந்த வேணாம்.." அமைச்சர் பரபரப்பு பேட்டி

"சபாநாயகர் எடுத்த நடவடிக்கை சரி தான்"ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || தமிழகமே எதிர்பார்த்த `மேகதாது’ விவகாரம் - சென்னையில் மவுனம் கலைத்த DKS

BREAKING || நேற்று அறிவித்த முதல்வர்... இன்றே தலைமைச் செயலகத்தில் அணிவகுக்கும் கார்கள்