தமிழ்நாடு

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 அறிவுரைகள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சென்னை மாநகராட்சி பத்து அறிவுரைகளை வழங்கி உள்ளது.

தந்தி டிவி

காலையில் ஒருவேளை மட்டும், கபசுர குடிநீரை குழந்தைகள் 30 மில்லியும், பெரியவர்கள் 60 மில்லியும் அருந்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வப்போது சூடான நீரை பருகவும், சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் கலந்து வெதுவெதுப்பான நீரில் காலை, மாலை இருமுறை வாய் கொப்பளிக்க கூறியுள்ளனர்.தினந்தோரும் துளசி, நொச்சி, வேப்பிலை இவற்றில் ஏதேனும் ஒன்றுடன் மஞ்சள் பொடி மற்றும் உப்பு கலந்து நீராவி பிடிக்க வேண்டும்.

காலை, மாலை இருவேளைகளிலும், சூடான ஓரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள், 3 சிட்டிகை மிளகு தூளுடன், நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் கலந்து பருகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இஞ்சி, துளசி, மிளகு, அதிமதுரம், மஞ்சள்தூள் ஆகியவற்றை கொதிக்க வைத்து வடிகட்டி இரண்டு வேளையும் மூலிகை டீ குடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேப்பம் பூ ரசம், தூதுவளை ரசம், மிளகு ரசம் என ஏதேனும் ஒன்றை தினமும் சாப்பிடலாம் என்றும், நாட்டு நெல்லிக்காய், துளசி, எலுமிச்சை, இஞ்சி, மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்து இயற்கை பானத்தை பருகலாம் என கூறியுள்ளனர்.

அன்னாசி, ஆரஞ்சு, சாத்துக்குடி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பழச்சாறு அருந்தவும், தினமும் 15 முதல் 20 நிமிடம் வரை காலை ஏழரை மணிக்குள்ளும், மாலை 5 முதல் 6 மணிக்குள் சூரிய குளியல் எடுக்கவும் அறிவுறுத்தி உள்ளனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு