தமிழ்நாடு

ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்கள்... அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்

தந்தி டிவி

தமிழகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்கள், நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் நிரப்பப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தூத்துக்குடியில் காசநோய் பரிசோதனை மையத்தை திறந்து வைத்த அமைச்சர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான 1,021 மருத்துவர்கள், 1,066 சுகாதார ஆய்வாளர்களுக்கான நேர்முகத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கொரோனா காலத்தில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக பணி நியமனம் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக கூறிய அமைச்சர், நீதிமன்ற உத்தரவு வந்தவுடன் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்