வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எல்பிஜி சிலிண்டர் விலை, இன்று முதல் ரூ.203 உயர்த்தப்பட்டுள்ளதால், தமிழகத்தில் உள்ள பல்வேறு ஓட்டல் மற்றும் டீ கடை உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் இந்த இக்கட்டான சூழலால், ஓட்டல் மற்றும் டீ கடைகளை மூடும் நிலை உருவாகியுள்ளதாக வேதனை அடைந்துள்ளனர்.