தமிழ்நாடு

கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்தப்படும் மாநகர பேருந்துகள்: கொரோனாவை தடுக்க மாநகர போக்குவரத்து கழகம் அதிரடி

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.

தந்தி டிவி

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக, சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள், கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. சென்னையில் மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் நாள்தோறும் இயக்கப்படும் 3 ஆயிரத்து 400 பேருந்துகளில் 30 லட்சம் பேர் பயணிப்பதாகவும், அவர்களின் நலனை பாதுகாக்கும் பொருட்டு, சுகாதாரத்துறை ஆலோசனையின் பேரில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதன்படி, அந்தந்த பணிமனைகளில் நேற்றிரவு முதல் கிருமி நாசினிகள் மூலம் சுத்தம் செய்யப்படும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு