தமிழ்நாடு

"10 ஆண்டுகளில் 8,000க்கும் மேற்பட்ட கருகலைப்பு" : சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கருகலைப்பு மையம்

திருவண்ணாமலையில் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று பாலினம் கண்டறிந்து கூறி, கருகலைப்பில் ஈடுபட்டு வந்த தம்பதி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி
திருவண்ணாமலையில் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று பாலினம் கண்டறிந்து கூறி, கருகலைப்பில் ஈடுபட்டு வந்த தம்பதி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வீட்டிலேயே ஸ்கேன் மையம் நடத்தி வந்த ஆனந்தி மற்றும் அவரின் கணவர் தமிழ்ச்செல்வன் மற்றும் உதவியாளர் சிவகுமார், கடந்த பத்து ஆண்டுகளில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட கருகலைப்பு செய்துள்ளது உறுதிசெய்யப்பட்டது. அவர்களை கைது செய்த போலீசார், பாலின தேர்வு தடை சட்டம் 1994 உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்