தமிழ்நாடு

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகளுக்கு சூடு வைத்த தாய்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகளுக்கு சூடு வைத்து கொடுமைபடுத்திய தாய்க்கு வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றம் 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் குஞ்சன்விளையை சேர்ந்த மகாலட்சுமி திருமணத்திற்கு பிறகு தனது கணவர் செல்வனுடன் பெங்களூருவில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் திருவிழாவுக்காக சொந்த ஊருக்கு வந்த மகாலட்சுமி, தனது குழந்தையுடன் திருமணத்திற்கு முன்பு காதலித்த கதிரவன் என்பவருடன் தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு பின் ஊருக்கு திரும்பி வந்த மகாலட்சுமியிடம் போலீசார் நடத்திய விசாரனையில் கதிரவனுடன் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருந்தது தெரியவந்தது.

மேலும் உல்லாசமாக இருப்பதற்கு இடையூறாக இருந்த தனது இரண்டரை வயது பெண் குழந்தைக்கு சூடு வைத்து கொடுமை படுத்தி இருந்ததும் தெரிய வந்தது. கதிரவன் தலைமறைவாகி உள்ள நிலையில் மகாலட்சுமி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி தனது மகள் என்று பாராமல் கொடுமைப்படுத்திய மகாலட்சுமியை 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி