தமிழ்நாடு

செப்டம்பர் 21.. இலங்கை அதிபர் கொடுத்த உறுதி

தந்தி டிவி

வரும் செப்டம்பர் 21-ம் தேதி மக்கள் தமக்கு உத்தரவிட்டால், புதிய பொருளாதார மாற்றம் ஏற்படுத்தப்பட்டு, நாட்டு மக்களுக்கு சிறந்த எதிர்காலம் கட்டியெழுப்பப்படும் என அதிபர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார். அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்த பின், தமது ஆதரவாளர்களிடையே பேசிய அவர், அரசை வழி நடத்த முடியாது என சிலர் கூறிய நிலையில், 2 ஆண்டுகளுக்குள் அதிபர் தேர்தலை நடத்தும் நிலைக்கு தான், நாட்டை முன்னோக்கி கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார்.

அன்று பற்றி எரிந்த நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தான் முன்வந்திருக்காவிட்டால் இன்றைய பங்களாதேஷின் நிலைமையை அன்றே இலங்கை சந்தித்திருக்கும் என்றும் ரணில் விக்கிரம சிங்க கூறினார். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்