தமிழ்நாடு

ஐஐடி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம்: தடயவியல் துறை விசாரணை - பாத்திமா தந்தை ஆஜர்

சென்னை ஐஐடியில் தற்கொலை செய்து கொண்ட கேரள மாணவியின் பெற்றோர் மத்திய குற்றப்பிரிவு முன்பு விசாரணைக்கு ஆஜராகினர்.

தந்தி டிவி

கேரள மாநிலம் கொல்லத்தை சார்ந்த பாத்திமா சென்னை ஐஐடியில் படித்து வந்த நிலையில், தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு அவரது குடும்பத்தினருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து பாத்திமாவின் தந்தை லத்தீப், சகோதரி ஆயிஷா உறவினர் சமீர் ஆகியோர் தற்போது சென்னை வந்துள்ளனர். இந்நிலையில் லத்தீப்பும், ஆயிஷாவும் தடயவியல் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜாராகியுள்ளனர். அப்போது பாத்திமா பயன்படுத்திய செல்போன், லேப்டாப் மற்றும் முக்கிய ஆவணங்களை அவர்கள் ஒப்படைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் அவர்கள் விசாரணைக்கு ஆஜராகின்றனர். இதனிடையே பாத்திமாவின் செல்போன் லாக் செய்திருப்பதால் அதில் உள்ள தகவலை எடுக்க முடியாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, மாதிரி செல்போனை பயன்படுத்தி, அதை அன்லாக் செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை