தமிழ்நாடு

பத்திரப்பதிவு துறை ஐஜி மனைவியிடம் செல்போன் பறிப்பு

சென்னையில் பத்திரப்பதிவு துறை ஐ.ஜி.யின் மனைவியிடம் செல்போனை பறித்துச் சென்ற கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
சென்னையில் பத்திரப்பதிவு துறை ஐ.ஜி.யின் மனைவியிடம் செல்போனை பறித்துச் சென்ற கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். பத்திரப் பதிவுத் துறையின் ஐ.ஜி.யாக இருப்பவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி குமரகுரு. இவரது மனைவி அனுராதா, கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டின் முன்பு கடந்த 8-ஆம் தேதி காலை செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் செல்போனை பறித்துச் சென்றுள்ளார். இது தொடர்பாக டிபி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் செல்போனை பறித்துச் சென்ற மணிகண்டன் என்ற இளைஞரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 4 செல்போன்கள், இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்