தமிழ்நாடு

ஆட்டோவில் சென்று அதிரடியாக சிலையை மீட்ட ஐ.ஜி பொன்மாணிக்கவேல்

காரில் கடத்தப்பட்ட ஐம்பொன் அம்மன் சிலை ஆட்டோவில் துரத்திச் சென்று மீட்டார் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல்

தந்தி டிவி

* போரூர் காரம்பக்கம் பகுதியில் காரில் அம்மன் சிலை கடத்தப்படுவதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

* இதையடுத்து, அவரது தலைமையில், நேற்று மாலை, 3 ஆட்டோக்களில் அங்கு சென்ற போலீஸார், வங்கி அருகே சந்தேகத்துக்கிடமான முறையில் வந்த காரை மடக்கினர்.

* காருக்குள், தாலியுடன் வழிபாட்டில் இருந்த சுமார் ஒன்றே முக்கால் அடி உயரமும், 20 கிலோ எடையும் கொண்ட ஐம்பொன் சிலை இருந்தததை அடுத்து, அதனை மீட்டனர். இதையடுத்து காரில் இருந்த நான்கு பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

* அந்த சிலை திருவள்ளூர் பகுதியில் உள்ள கோயிலில் இருந்து திருடப்பட்டது தெரிந்தது. மேலும், சிலையை 50 லட்சம் ரூபாய்க்கு விற்பதற்காக கடத்தி வரப்பட்டதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு