#thiruvarurcollector #library நூலகத்தில் இணைய வசதி ஏற்படுத்தி தந்தால் உங்களை யாரும் தூக்கில் போட மாட்டார்கள், நிதி இல்லையென்றால் நானே பணம் தருகிறேன் என, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை நூலக குழுவின் ஆய்வின் போது, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் கூறியதற்கு மாணவர்கள் கைதட்டி தங்களது பாராட்டைத் தெரிவித்தனர். திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் இணைய வசதி சரிவர இல்லை என மாணவர்கள் புகார் தெரிவித்த போது, தனியார் நெட்வொர்க் பயன்படுத்த இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என நூலக அலுவலர் கூறிய நிலையில், அதற்கு மாவட்ட ஆட்சியர் இவ்வாறு பதிலளித்தார்.