தமிழ்நாடு

"சனாதனத்திற்கு எதிராக பேசினால்.... நாக்கை பிடுங்கி, கண்களை தோண்டிவிடுவோம்.."

தந்தி டிவி

சனாதன தர்மத்துக்கு எதிராக யாரேனும் பேசினால் அவர்களின் நாக்கையும், கண்களையும் பிடுங்குவோம் என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் எச்சரித்துள்ளார்.

ராஜஸ்தானின் பார்மர் தொகுதியில் பாஜகவின் பரிவர்த்தன் யாத்திரை நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், நமது முன்னோர் உயிரைக் கொடுத்து பாதுகாத்த சனாதன தர்மத்திற்கு முடிவு கட்டுவோம் என சிலர் பேசுவதாக தெரிவித்தார். அத்தகைய நபர்களை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம் எனக் கூறிய அவர், சனாதன தர்மத்திற்கு எதிராக பேசுபவர்களின் நாக்கை அறுப்பதுடன், வெறுப்புடன் பார்த்தால் அவர்களது கண்களை பிடுங்குவோம் என்றும் தெரிவித்தார். சனாதன தர்மத்திற்கு எதிராக பேசுபவர்கள் யாராக இருந்தாலும், தங்களது அரசியல் அதிகாரத்தையும், அந்தஸ்தையும் அவர்களால் நிறுவ முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்