தமிழ்நாடு

பொன்மாணிக்கவேலுக்கு செய்து கொடுத்த வசதிகள் என்னென்ன..? அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் இறுதி கெடு

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரிக்கு செய்து தரப்பட்ட வசதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் இறுதி கெடு விதித்துள்ளது.

தந்தி டிவி

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, பொன். மாணிக்கவேலுக்கு தரப்பட்ட அடிப்படை வசதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஒரு வாரம் கால அவகாசத்தை அரசு தரப்பு கேட்டது. இதற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட நேரிடும் என எச்சரித்தனர்.

இதையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு நியமித்த 104 காவலர்களில் 26 பேர் பணியில் சேர்ந்துள்ளதாகவும், சிலை கடத்தல் தொடர்பாக 174 வழக்கு ஆவணங்களை வழங்கி உள்ளதாகவும் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, பொன்.மாணிக்கவேலுக்கு வழங்கிய வசதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய இறுதி கெடு விதித்து, விசாரணையை வரும் 7-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

மேலும், நிபந்தனை முன் ஜாமீனில் உள்ள கிரண் ராவ், பிப்ரவரி 7ம் தேதிக்குள் விசாரணை அதிகாரி முன் ஆஜராகாவிட்டால் சொத்துகள் பறிமுதல் செய்ய உத்தரவிடப்படும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை