தமிழ்நாடு

சிலை கடத்தல் விவகாரம் : தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா, கிரண்ராவை தேடும் தனிப்படை

சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா மற்றும் கிரண்ராவை, தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

தந்தி டிவி

சென்னையைச் சேர்ந்த அந்த இருவரின் வீடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் இருவரும் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ரன்வீர்ஷா, கிரண்ராவ் இருவரையும் கைது செய்வதற்காக ஏ.டி.எஸ்.பி. தலைமையிலான குழு ஒன்றை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் நியமித்துள்ளார்.

இந்த தனிப்படை, மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு விரைந்துள்ளது. இதனிடையே பெண் தொழிலதிபர் கிரண் ராவின் ஈ.சி.ஆர். பங்களாவிலிருந்து பல சிலைகளை அப்புறப்படுத்தி வேறு இடங்களில் மறைத்து வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதை தேடும் பணியிலும் சிலை கடத்தல் தடுப்பு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்