தமிழ்நாடு

சிலை கடத்தல் வழக்கு - பொன்.மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

தந்தி டிவி

சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக பொன் மாணிக்கவேலும், சிபிஐ விசாரணை அதிகாரியும் பரஸ்பரம் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சிலை கடத்தல் வழக்கில் இருந்து பொன்.மாணிக்கவேலுக்கு முன் ஜாமின் வழங்க கூடுதல் நிபந்தனைகளை விதிக்க கோரி சிபிஐ தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அப்போது, பொன் மாணிக்கவேலின் பாஸ்போர்ட் காலாவதி ஆகிவிட்டதால், அதனை புதுப்பித்து சிபிஐயிடம் ஒப்படைக்கப்படும் என்றும், அதுவரை வெளிநாடுகளுக்கு செல்லமாட்டார் என்றும் அவர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக பொன் மாணிக்கவேலும், சிபிஐ விசாரணை அதிகாரியும் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக்கூடாது என்று கூறி வழக்கை முடித்து வைத்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்