நாற்பத்தியொரு, சிலை கடத்தல் வழக்குகளின் ஆவணங்கள் மாயமானது குறித்து விசாரிக்க கோரிய வழக்கில் டிஜிபி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை வீடியோ கான்பிரன்சிங் மூலம் விசாரித்த நீதிமன்றம் அறிக்கை அளிக்க அவகாசம் வழங்கி, வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.