தமிழ்நாடு

தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் IAS, IPS தேர்ச்சி விகிதம் சரிவு - காரணம் என்ன?

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பதவிகளுக்கான 2021ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தில் 27 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.

தந்தி டிவி

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பதவிகளுக்கான 2021ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தில் 27 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.

ஒரு காலத்தில் தமிழகத்தில் இருந்து ஆண்டுக்கு நூற்றுக்கும் அதிமானவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று, இந்தியா முழுவதும் ஐ.ஏ.எஸ், ஐ.பி, எஸ் அதிகரிகளாக பணியாற்றி, தமிழகத்திற்கு பெருமை சேர்த்தனர். ஆனால் கடந்த பத்தாண்டுகளாக தமிழகத்தில் இருந்து தேர்வு பெறுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.

2012ல் தமிழகத்தில் இருந்து 97 பேர் தேர்ச்சி பெற்றனர். 2013ல் 150 பேரும், 2014ல் 118 பேரும், 2015ல் 82 பேரும் தேர்ச்சி பெற்றனர். 2016ல் தேர்ச்சி பெற்றவர் எண்ணிக்கை 78ஆக குறைந்தது. 2017ல் 42ஆகவும்,2018ல் 45ஆகவும் மேலும் குறைந்தது. 2019ல் 60 பேரும், 2020ல் 36 பேரும் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் தனியார் துறைகளில் அதிக சம்பளத்தில் நல்ல வேலைகள் அதிகம் உருவாகியுள்ளதால், ஐ.ஏ.ஏஸ், ஐ.பி.எஸ் பணிகள் மீதான ஈர்ப்பு இங்கு குறைந்துள்ளதாக துறை சார் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆங்கிலம் மற்றும் தமிழில் மொழி திறன்கள் குறைவாக இருப்பதும், தேர்ச்சி விகிதம் குறைய ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. முன்பு சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயார் செய்ய 6 முதல் 7 ஆண்டுகள் வரை முன் தயாரிப்பில் ஈடுபடும் போக்கு பரவலாக இருந்தது. ஆனால் தற்போது இரண்டு ஆண்டுகள் கூட தயாரிப்பில் ஈடுபட யாரும் தயாரில்லை என்று பயிற்சி நிறுவன ஆசிரியர்கள் கூறுகின்றனர். விரைவில் வேலையில் சேர வேண்டும் என்ற விருப்பம் அதிகரித்துள்ளதால், நீண்ட வருடங்கள் முன் தயாரிப்பில் ஈடுப்படுவதற்கு பெரும்பாலனவர்கள் தயங்குவதாக கூறுகின்றனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு